இசை உலகின் பேரிழப்பு..! ஆஷா போஸ்லே மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்
பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92) உடல் நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
பாடகி ஆஷா போஸ்லேவிற்கு (Asha Bhosle) மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் ஏப்ரல் 11 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இரங்கள் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மாபெரும் பாடகி ஆஷா போஸ்லே அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அவரது குரலின் வழியே, அவரது கலை நம்மிடையே என்றென்றும் அழியாமல் நிலைத்திருக்கும். இந்தத் துயர நேரத்தில், அவரது அன்புக்குரியவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். என குறிபிட்டுள்ளார்.
महान गायिका आशा भोसले जी के निधन का समाचार अत्यंत दुखद है।
— Rahul Gandhi (@RahulGandhi) April 12, 2026
उनकी आवाज़ के माध्यम से उनकी कला सदा हमारे बीच अमर रहेगी।
इस दुख की घड़ी में मेरी संवेदनाएं उनके शोकाकुल प्रियजनों और प्रशंसकों के साथ है। pic.twitter.com/Pbi1YgKcrp