சர்ச்சைக்குள்ளாகும் ராகுல் காந்தியின் தமிழக பயணம்

Rahul Gandhi
By Fathima Aug 01, 2026 05:31 AM GMT
Report

தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய்யை சந்திக்காதது பேசுபொருளாகியுள்ளது.

தமிழகம் வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கான முகாமில் கலந்து கொள்கிறார்.

இதன் பின்னர் முன்னாள் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்ளுடன் தமிழகத்தில் அரசியல் களநிலவரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


2029ம் ஆண்டு நாடாளுமன்ற பணிகள் குறித்தும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.

ஆனால் தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்திக்காமல் செல்வது பேசுபொருளாகியுள்ளது.

கர்நாடகா காவிரி பிரச்சனைக்கு நடுவே இருவரின் சந்திப்பு நிகழாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குள்ளாகும் ராகுல் காந்தியின் தமிழக பயணம் | Rahul Gandhi Come To Tamilnadu Today