வயநாடு தொகுதியில் தமிழக அரசியல்வாதியின் மனைவி - தொகுதி மாறும் ராகுல் காந்தி?
ராகுல் காந்தி தேர்தலில் மீண்டும் தொகுதி மாறுவார் எனக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி
2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். ஸ்மிருதி இராணி அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த நிலையில்,
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளதால், அந்தத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என பல காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ரேபரேலி தொகுதி?
மேலும், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அமேதி தொகுதியிலும் அவர் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ராகுல் காந்தியும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையில், வயநாடு தொகுதியில் இடதுசாரி கூட்டணி சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி அன்னி ராஜா போட்டியிடவுள்ளார்.
பிரியங்கா காந்தி ராய் பரேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், அவர் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்து வருகிறார்.