திடீரென சரிந்து விழுந்த பிரச்சார மேடை; நிலை தடுமாறிபோன ராகுல் காந்தி - திகிலூட்டும் காட்சி!
ராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் திடீரென மேடையின் ஒரு பகுதி சரிந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
சரிந்த மேடை
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பான கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரையிலும் வாக்குப்பதிவு நாடு முழுவதும் 6 கட்டங்கள் நடந்து முடிந்தது. எஞ்சிய 7ம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது.
அந்த வகையில், பீகார் மாநிலம், பாடலிபுத்ரா தொகுதி வேட்பாளரான ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதிக்கு ஆதரவாக பாலிகஞ்ச் புறநகர்ப் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பரப்புரையில் காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
தடுமாறிய ராகுல்
அப்போது மிசா பாரதி, ராகுலின் கையைப் பிடித்து மேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடையின் ஒரு பகுதி கீழே இறங்கியது. அங்கு மேடையில் இருந்த ராகுல் காந்தி, மிசா பாரதி உள்ளிட்ட மேடையில் இருந்த தலைவர்கள் அனைவரும் சற்று தடுமாறினர். அதன் பிறகு அனைவரும் சுதாரித்து நின்றனர்.
எனினும் பாதுகாவலர்கள் அவர்களை நோக்கி விரைந்து ஓடிவந்தனர்.இந்த சம்பவத்தை அங்கிருந்த நேரில் பார்த்த காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது. மேலும் இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
VIDEO | A portion of the stage set for Rahul Gandhi's rally in Bihar's Paliganj collapsed as the Congress MP arrived with other party leaders. #LSPolls2024WithPTI #LokSabhaElections2024 pic.twitter.com/lDeQjTUnq6
— Press Trust of India (@PTI_News) May 27, 2024