பட்ஜெட்டில் இதெல்லாம் இடம்பெற வேண்டும்: ராகுல் காந்தி

president parliament finance
By Jon Feb 08, 2021 01:58 PM GMT
Report

விவசாயிகள், சிறு, குறு நிறுவனங்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2021ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கொரோனா பரவலுக்குப் பின்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதில் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, "2021ஆண் ஆண்டிற்கான பட்ஜெட் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இருக்க வேண்டும், இந்தப் பட்ஜெட்டில், பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்ற சுகாதார செலவுகளை அதிகப்படுத்த வேண்டும்.

அதேபோல நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கப் பாதுகாப்பு செலவுகளை அதிகப்படுத்த வேண்டும்" என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டிற்கான பட்ஜெட், முதல் முறையாகக் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.