’பாலங்களைக் கட்டுங்கள், சுவர்களை அல்ல’ மத்திய அரசை சாடும் ராகுல் காந்தி

budget bjp congress
By Jon Feb 02, 2021 10:15 AM GMT
Report

 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் - மத்திய அரசுடன் நடைபெற்ற அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

மத்திய அரசு சட்டங்களைப் பின்வாங்கப்போவதில்லை என அறிவித்துவிட்டது. இந்நிலையில் கடந்த 26-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தையும் டெல்லி காவல்துறை வன்முறை கொண்டு ஒடுக்கியது.

இதனைத் தொடர்ந்து டெல்லி எல்லையில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

இதற்காக முள்வேளிகளைப்பயன்படுத்தி டெல்லி போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பதிவில், “இந்திய அரசே பாலங்களைக் கட்டுங்கள், சுவர்களை அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி அறிவுரை சொல்வதைப் போல அவருடைய பதிவு அமைந்துள்ளது.