பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறாது; மோடி ஊழலின் தலைவர் - விளாசிய ராகுல் காந்தி!

Indian National Congress Rahul Gandhi BJP Narendra Modi Lok Sabha Election 2024
By Jiyath Apr 17, 2024 06:40 AM GMT
Report

ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி

உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி "பாஜக செல்வாக்கு சரிந்து வருகிறது.

பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறாது; மோடி ஊழலின் தலைவர் - விளாசிய ராகுல் காந்தி! | Rahul Gandhi Blasted Bjp And Narendra Modi

அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தை அழிக்க பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி செய்கிறது. காங்கிரசும் இந்தியா கூட்டணியும் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க முயற்சி செய்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்க விகிதம் போன்ற பிரச்சனைகள் குறித்து பிரதமரோ, பாஜகவினரோ வாய் திறப்பதே இல்லை.

அதிமுக காணாமல் போகுமா? நீ போலீஸ் தானே.. கண்டுபிடிச்சு கொடு - விளாசிய ஈபிஎஸ்!

அதிமுக காணாமல் போகுமா? நீ போலீஸ் தானே.. கண்டுபிடிச்சு கொடு - விளாசிய ஈபிஎஸ்!

ஊழலின் தலைவர்

விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு குறித்தெல்லாம் பாஜகவுக்கு கவலை இல்லை. விசாரணை அமைப்புகள் மூலம் பல நிறுவனங்களை மிரட்டி பாஜக கொள்ளை அடித்துள்ளது. பாஜக ஊழல்வாதிகளை மட்டும் வைத்துக் கொள்ளவில்லை; ஊழல் பணத்தையும் வைத்துள்ளது.

பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறாது; மோடி ஊழலின் தலைவர் - விளாசிய ராகுல் காந்தி! | Rahul Gandhi Blasted Bjp And Narendra Modi

இந்த தேர்தலில் பா.ஜ.க. 150 இடங்களில்தான் வெற்றி பெறும் என்று அக்கட்சியினரே கூறுகின்றனர். 150 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது. பிரதமர் கடலுக்கு அடியில் சென்றார்; ஆகாயத்தில் பறந்தார்; இரண்டுக்கும் இடையே உள்ள மக்களை மறந்துவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஊழலின் தலைவர்" என்று தெரிவித்துள்ளார்.