காங்கிரஸ் கட்சி கொடியுடன் உற்சாகமாக ஓடிய ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ
காங்கிரஸ் கட்சி கொடியுடன் உற்சாகமாக ஓடிய ராகுல் காந்தியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.
பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.
கர்நாடகா, மாண்டியா மாவட்டத்தில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிற கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்து கொண்டார்.

உற்சாகமாக ஓடிய ராகுல்காந்தி
இந்நிலையில், இந்திய ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சி கொடியுடன் ராகுல் காந்தி உற்சாகமாக ஓடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளம் போலீஸ்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க முடிகிறது. அவர் மெதுவாக ஓடுவதன் மூலம் பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
ராகுல்காந்தி, 4 நாட்களுக்கு முன்பு சித்தராமையா ஜியின் கையைப் பிடித்து இந்திய ஒற்றுமை பயணத்தில் ஓடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
Rahul Gandhi and DK.Shivakumar started running ..
— Rajkiran Mamidala (Hyd) Dist (@Rajkiran071989) October 10, 2022
Chasing a dream requires to do both...#BharatJodoYatra ?? pic.twitter.com/7IweedA4cL
When @RahulGandhi starts running with @siddaramaiah @BJP4Karnataka also would run out of power#BharatJodaYatra Fun , @RahulGandhi fit and healthy.. pic.twitter.com/SR3QPbsoaE
— Satyameva Jayate (@sajuspeaks) October 6, 2022