40 வீரர்கள் உயிரிழந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் ராகுல்காந்தி மரியாதை...!
புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு ராகுல்காந்தி எம்.பி மரியாதை செலுத்தினார்
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த ஆண்டு இறுதியில் கன்னியாகுமரியில் தொடங்கினார். பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர். ராகுல்காந்தி, செல்லும் இடங்களில் நடனம் ஆடியும், பாட்டு பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
வெறுப்பு இல்லாத சமுதாயமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த யாத்திரையில் இணைந்து வருகிறார்கள்.

40 உயிரிழந்த வீரர்களுக்கு ராகுல்காந்தி மரியாதை
இந்தியாவின், ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி மத்திய சேமக் காவல் படையினர் வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தது.
சென்றுக்கொண்டிருந்த பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அப்போது, இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்திய ஒற்றுமை பயணத்தின் போது, புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு ராகுல்காந்தி எம்.பி மரியாதை செலுத்தினார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Today during BharatJodoYatra Shri RahulGandhi ji paid tributes to the brave soldiers martyred in Pulwama attack.?????#BharatJodoYatra#RahulGandhi pic.twitter.com/k8B9ksFDWk
— Suhana (@Suhan1287) January 28, 2023