கொட்டும் பனிமூட்டம் - கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கம்பீரமாக நடந்த ராகுல்காந்தி..!
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த ஆண்டு இறுதியில் கன்னியாகுமரியில் தொடங்கினார். பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி.
ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.
ராகுல்காந்தி, செல்லும் இடங்களில் நடனம் ஆடியும், பாட்டு பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். வெறுப்பு இல்லாத சமுதாயமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த யாத்திரையில் இணைந்து வருகிறார்கள்.

கம்பீரமாக நடந்த ராகுல்காந்தி
இன்று காலையில் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையில், அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில் இமாச்சல பிரதேசத்தின் கட்டோட்டாவில் ராகுல்காந்தி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த தொண்டர்கள் சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
#WATCH | Congress party's Bharat Jodo Yatra resumes from Ghatota, Himachal Pradesh amid dense fog. pic.twitter.com/ToVNvwFFQF
— ANI (@ANI) January 18, 2023