பாத யாத்திரை பயணம் - இளம் பெண்களுடன் Foot Ball விளையாடிய ராகுல்காந்தி - வைரலாகும் வீடியோ

Rahul Gandhi Viral Video
By Nandhini Nov 15, 2022 12:06 PM GMT
Report

பாத யாத்திரை பயணத்தில் இளம் பெண்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி Foot Ball விளையாடினார்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர். ராகுல்காந்தி, செல்லும் இடங்களில் நடனம் ஆடியும், பாட்டு பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

வெறுப்பு இல்லாத சமுதாயமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த யாத்திரையில் இணைந்து வருகிறார்கள்.

rahul-gandhi-bharat-jodoyatra-viral-video

Foot Ball விளையாடிய ராகுல்காந்தி

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, ஒற்றுமைப் பயணத்தில் இளம் பெண் வீரர்களுடன் கால்பந்து விளையாடினார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.