பாத யாத்திரை பயணம் - தன்னைத்தான் சாட்டையால் அடித்துக் கொண்ட ராகுல்காந்தி - வைரலாகும் விடியோ

Rahul Gandhi Viral Video
By Nandhini Nov 03, 2022 09:18 AM GMT
Report

பாத யாத்திரை பயணத்தின்போது தன்னைத்தான் சாட்டையால் அடித்துக் கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் வீடியோ வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.

rahul-gandhi-bharat-jodoyatra-viral-video

சாட்டையால் அடித்துக் கொண்ட ராகுல்காந்தி

தற்போது சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தெலுங்கானாவில் நடந்த போனலு பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சாட்டையை கையில் எடுத்து, தன்னைத்தானே அடித்துக் கொண்டார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.