பாத யாத்திரையில் பாட்டுப் பாடி ‘பதுகம்மா’ நடனமாடிய ராகுல் காந்தி...! - வைரல் வீடியோ
தெலுங்கானாவில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது ராகுல் காந்தி ‘பதுகம்மா’ நடனமாடினார்.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.
பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.

‘பதுகம்மா’ நடனமாடிய ராகுல் காந்தி
தெலுங்கானாவில் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி தொண்டர்களுடன் சேர்ந்து ‘பதுகம்மா’ நடனமாடினார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.