மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் எம்.பி. ராகுல் காந்தி சாமி தரிசனம்...! - வைரலாகும் வீடியோ

Rahul Gandhi Viral Video
By Nandhini Oct 21, 2022 06:32 AM GMT
Report

இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ஆந்திராவில் உள்ள மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.

எம்.பி. ராகுல் காந்தி சாமி தரிசனம்

இந்நிலையில், இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ஆந்திராவில் உள்ள மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று சாமி தரிசனம் செய்தார். தற்போது இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

rahul-gandhi-bharat-jodoyatra-viral-video