பாதயாத்திரையில் சிறுவனுடன் Push-up செய்த ராகுல் - வைரலாகும் வீடியோ

Rahul Gandhi Viral Video
By Nandhini Oct 12, 2022 07:18 AM GMT
Report

பாதயாத்திரையில் சிறுவனுடன் Push-up செய்த ராகுல் காந்தியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி.

ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.

சமீபத்தில் கர்நாடகா, மாண்டியா மாவட்டத்தில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ​​காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிற கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்து கொண்டார்.

rahul-gandhi-bharat-jodoyatra-viral-video

சிறுவனுடன் Push-up செய்த ராகுல்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், பாதயாத்திரையில் ராகுல்காந்தி சிறுவனுடன் Push-up செய்தார். கடைசியில் எழுந்த நின்ற ராகுல் காந்தி வெற்றி பெற்ற சிறுவனுக்கு கை கொடுத்து, தலையை வருடினார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.