சட்டென தாயிடமிருந்து தாவி ராகுல் கன்னத்தில் முத்தமிட்ட சிறுமி - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
சட்டென தாயிடமிருந்து தாவி ராகுல்காந்தி கன்னத்தில் முத்தமிட்ட சிறுமியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.
பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.
கர்நாடகா, மாண்டியா மாவட்டத்தில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிற கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்து கொண்டார்.

கன்னத்தில் முத்தமிட்ட சிறுமி
இந்நிலையில், இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல்காந்தியைப் பார்த்ததும் திடீரென தாயிடமிருந்து சிறுமி தாவி ராகுல்காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டாள். இதை எதிர்பார்க்காத ராகுல்காந்தி அச்சிறுமியை கட்டியணைத்து தூக்கிக்கொண்டு நடந்தார்.
தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஒரு மில்லியன் இதயங்களை கொள்ளையடித்துள்ளது.
This video stole a million hearts ❤️
— Ravi Kapur (@Kap57608111) October 10, 2022
Rahul Gandhi in #BharatJodoYatra pic.twitter.com/T5EPkGGMj2