செல்ஃபி எடுக்கும் போது தொழிலாளியின் கையை தட்டிவிட்ட ராகுல் காந்தி - வைரலாகும் வீடியோ..!
Rahul Gandhi
Viral Video
By Nandhini
செல்ஃபி எடுக்கும் போது தொழிலாளியின் கையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தட்டி விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தொழிலாளியின் கையை ராகுல் காந்தி
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய 'பாரத் ஜோடோ யாத்திரை' இதுவரை எட்டு மாநிலங்களைக் கடந்து சென்றுள்ளது. இதில் ராகுலின் இந்த பயணம் தற்போது ராஜஸ்தானிலிருந்து ஹரியானாவிற்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில், மேடையில் செல்ஃபி எடுக்கும் போது தொழிலாளியின் கையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோபமாக தட்டி விட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
