பாத யாத்திரை பயணத்தில் ராகுலுடன் இணைந்த பிரியங்கா காந்தி - வைரலாகும் வீடியோ...!

Rahul Gandhi Viral Video
By Nandhini 1 வாரம் முன்

இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுலுடன் பிரியங்கா காந்தி இணைந்து பாத யாத்திரை பயணத்தை மேற்கொண்டார்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர். ராகுல்காந்தி, செல்லும் இடங்களில் நடனம் ஆடியும், பாட்டு பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

வெறுப்பு இல்லாத சமுதாயமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த யாத்திரையில் இணைந்து வருகிறார்கள்.

rahul-gandhi-bharat-jodoyatra-priyanka-gandhi

ராகுலுடன் இணைந்த பிரியங்கா காந்தி 

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று காலை மத்திய பிரதேசத்தில் உள்ள போர்கானிலிருந்து பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினர்.

இந்த பயணத்தில், ‘வில்லில் இருந்து வெளிவரும் அம்பு நிச்சயமாக இலக்கை அடையும்’ என்று வில்லை வானத்தை நோக்கி ப்ரியங்கா காந்தியும், ராகுல்காந்தியும் வானத்தை நோக்கி ஏய்தினர்.

சமீபத்தில் பாத யாத்திரை பயணத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இணைந்து பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.