இந்திய ஒற்றுமை பயணம் நிறைவு; காங்கிரஸ் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றினார் ராகுல் காந்தி...!
இந்திய ஒற்றுமை பயணம் நிறைவையொட்டி, ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேசியகொடியை ஏற்றினார்.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த ஆண்டு இறுதியில் கன்னியாகுமரியில் தொடங்கினார்.
பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வந்தார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வந்தனர்.
ராகுல்காந்தி செல்லும் இடமெல்லாம், பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்பு கொடுத்தனர். ராகுல்காந்தி, செல்லும் இடங்களில் நடனம் ஆடியும், பாட்டு பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
வெறுப்பு இல்லாத சமுதாயமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த யாத்திரையில் இணைந்து வந்தனர்.
சமீபத்தில், ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதி, ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த 40 இராணுவ வீரர்களுக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை நிறைவு
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடைந்த நிலையில், ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது, ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி உடனிருந்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH | Jammu and Kashmir: Congress MP Rahul Gandhi unfurls the national flag at Lal Chowk in Srinagar. pic.twitter.com/I4BmoMExfP
— ANI (@ANI) January 29, 2023
Congress President Kharge Ji hoisted National flag at PCC office Srinagar. Rahul Gandhi Ji and Priyanka Gandhi Ji were present. pic.twitter.com/c6KwkLXDMb
— Venisha G Kiba ? (@KibaVenisha) January 30, 2023