கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை... - ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம்... - சிறப்பு பார்வை..!

Rahul Gandhi
By Nandhini Jan 30, 2023 12:10 PM GMT
Report

ராகுல் காந்தியின் பாத யாத்திரை

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த ஆண்டு இறுதியில் கன்னியாகுமரியில் தொடங்கினார்.

பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வந்தார் ராகுல்காந்தி. ராகுல்காந்தி செல்லும் இடமெல்லாம், பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்பு கொடுத்தனர். ராகுல்காந்தி, செல்லும் இடங்களில் நடனம் ஆடியும், பாட்டு பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை நிறைவு ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடைந்த நிலையில், ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது, ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி உடனிருந்தனர்.

rahul-gandhi-bharat-jodoyatra

இந்திய ஒற்றுமை பயணம் ஒரு பார்வை

கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாக்குமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று நிறைவடைந்தது.

இந்த இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல்காந்தி இதுவரை 116 நாட்களில், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்து, 4080 கி.மீ. தூரம் நடந்துள்ளார்.

மேலும், இந்த இந்திய ஒற்றுமை பயணத்தில் 12 பொதுக்கூட்டங்கள், 13 செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தியுள்ளார். மேலும், 375க்கும் மேற்பட்டோருடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துரையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.