ராகுல்காந்தியை பார்த்த சந்தோஷத்தில் கதறி அழுத சிறுமியை அன்போடு கட்டியணைத்த ராகுல் - வைரலாகும் வீடியோ
ராகுல்காந்தியை அருகில் பார்த்த சந்தோஷத்தில் கதறி அழுத சிறுமியை அன்போடு கட்டியணைத்த ராகுல்காந்தியின் வீடியோ வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ராகுல்காந்திக்கு பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்று வருகின்றனர்.

கதறி அழுத சிறுமி
இந்நிலையில், இன்று பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியை பார்த்தவுடன் ஒரு சிறுமி கூட்டத்தில் அவரிடம் ஓடி வந்தார். சிறுமி ஓடிவருவதைப் பார்த்த ராகுல்காந்தி, மெல்ல, மெல்ல என்று சொல்ல, ராகுல்காந்தியை அருகில் பார்த்த சந்தோஷத்தில் அச்சிறுமி உடனே சந்தோஷத்தில் கதறி அழுகிறாள். அப்போது, அச்சிறுமியை அன்போடு கட்டியணைத்து ஆறுதல்படுத்தினார் ராகுல்காந்தி. இதைப் பார்த்த அங்கிருந்தர்கள் நெகிழ்ச்சியில் உறைந்துப்போயினர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
No caption needed.
— Bharat Jodo (@bharatjodo) September 28, 2022
Only love ♥️#BharatJodoYatra pic.twitter.com/LSnbCEBk5v