அர்த்தமற்று பேசுவதால் வைரஸை வீழ்த்தமுடியாது... பிரதமரை சாடிய ராகுல்காந்தி...
மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்று பேசுவதால் மட்டும் கொரோனாவை வெல்ல முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அனைத்து மக்களையும் வெகுவாக பாதித்துள்ளது. படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு என ஒட்டுமொத்த இந்திய நாடே ஸ்தம்பித்து நின்ற நிலையைக் கண்டு உலக நாடுகளே ஒருகணம் அதிர்ந்தன.

அதேசமயம் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களாக நோயின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது சற்று ஆறுதல் அளித்துள்ளது. இந்நிலையில் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அவர் பேசினார்.
कोरोना से लड़ने के लिए चाहिए-
— Rahul Gandhi (@RahulGandhi) May 30, 2021
सही नीयत, नीति, निश्चय।
महीने में एक बार निरर्थक बात नहीं!
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் "கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராட, உங்களுக்கு சரியான எண்ணம், கொள்கை, உறுதிப்பாடு தேவை. மாதத்திற்கு ஒரு முறை அர்த்தமற்று பேசும் பேச்சுகளால் கொரோனவை எதிர்த்து போராட முடியாது" என கடுமையாக விமர்சித்துள்ளார்.