Saturday, Jul 12, 2025

சர்வாதிகாரம் என்றால் அது காங்கிரஸ் ஆட்சியில்தான் : ராகுல் காந்திக்கு பா.ஜ.க பதிலடி

Rahul Gandhi BJP
By Irumporai 3 years ago
Report

நாடு சர்வாதிகாரத்தைப் பார்த்தது என்றால் அது காங்கிரஸ் ஆட்சியில்தான் என்று  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது.

கொந்தளித்த ராகுல்

ஜனநாயகத்தின் மரணத்தை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். ஏறக்குறைய இந்தியா, உங்கள் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கிறது. இந்தியா  2, 3 பணக்காரர்களுக்கு மட்டும் தான் இந்த சர்வாதிகார ஆட்சி நடத்தப்படுறது என கூறினார்.

சர்வாதிகாரத்தைப் பார்த்தது காங்கிரஸ் ஆட்சியில்தான்

ராகுலின் இந்த கருத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் :

சர்வாதிகாரம் என்றால் அது காங்கிரஸ் ஆட்சியில்தான் : ராகுல் காந்திக்கு பா.ஜ.க பதிலடி | Rahul Gandhi Asks Democracy In Your Party

உங்கள் கட்சியில் ஜனநாயகம் உள்ளதா? நாடு சர்வாதிகாரத்தைப் பார்த்தது என்றால் அது காங்கிரஸ் ஆட்சியில்தான். எமர்ஜென்சி காலத்தில் தான் நாடு சர்வாதிகாரத்தை பார்த்தது.

ராகுல் காந்தி எங்களுக்கு ஜனநாயகம் பற்றி போதிக்க வேண்டாம் என கூறினார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காந்தியின் மவுனம் குறித்து  பேசிய ரவிசங்கர் பிரசாத் ,அவர் உண்மையை மட்டும் பேசினால், அவர் ஏன் ஜாமீனில் இருக்கிறார் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

 காங்கிரஸ் தலைவருக்கு அரசியலில் தீவிரம் இல்லை. அரசு அமைப்புகளைஇழிவுபடுத்துவதை நிறுத்துங்கள் என்று கூறினார்.