பிரதர்..நாம் எப்போது சைக்கிளிங் செல்வது? ராகுல் காந்தி கேள்விக்கு முதல்வர் சொன்ன பதில்!
சென்னையை சைக்கிளில் சுற்றலாம் என முக ஸ்டாலினிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உயர்த்திடவும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது சமூக வலைட்தளப்பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
Evening’s calm sets the stage for new dreams. pic.twitter.com/IOqZh5PYLq
— M.K.Stalin (@mkstalin) September 4, 2024
சைக்கிளிங்
அதனை பார்த்த ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில்,"பிரதர்.. நாம் எப்போது சென்னையில் சைக்கிளிங் செல்வது?" என்று பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தியின் பதிவை பகிர்ந்து அவரது கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அந்த பதிவில், "அன்புக்குரிய சகோதரரே.. எப்போது நேரம் கிடைக்கிறதோ, சென்னையை சைக்கிளில் சுற்றி அந்த தருணத்தை அனுபவிக்கலாம். ஏற்கனவே ஒரு ஸ்வீட் பாக்ஸ் நான் தர வேண்டிய பாக்கி உள்ளது.
சைக்கிள் உலா முடிந்ததும், என் வீட்டில் தென்னிந்திய மதிய உணவை, ஸ்வீட் உடன் ருசிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
Brother, when are we cycling together in Chennai? ? https://t.co/fM20QaA06w
— Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2024