ராகுல் காந்திக்கு சிறை : கமலாலயத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் கட்சியினர் தமிழ ஜபாஜக அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
ராகுல் கைது
பிரதமர் மோடி குறித்து சர்ச்சையாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம், மேலும் ராகுல் காந்தி எம்பி பதவியும் நீக்கப்பட்டது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ராகுல்காந்தி தகுதிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து ராகுல்காந்தி டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் விதமாக ராகுல்காந்தி பதில் கடிதம் எழுதினார்.

கமலாலயம் முற்றுகை
அதில், கடந்த நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அரசு பங்களாவில் வசித்து வந்துள்ளேன், கடந்த காலங்களில் பல நினைவுகளை இந்த வீடு அளித்துள்ளது அதற்கு நன்றி , அரசு உத்தரவினை நான் மதிக்கின்றேன் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் தமிழ ஜபாஜக அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியதால் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.