திருமணம் எப்போது? சிறுவனின் கேள்வி - ராகுல் காந்தி சொன்னதை பாருங்க..
ஒரு சிறுவன் ராகுல் காந்தியிடம் எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டான்.
திருமணம்
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு சிறுவனுடன் உரையாடினார்.

அப்போது அவரிடம், "நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்?" என்று அந்தச் சிறுவன் கேட்டான்.
அதற்கு அவர், 'தனது வேலை முடிந்ததும் திருமணம் செய்துகொள்வதாக' பதிலளித்தார். ராகுல் காந்தியின் திருமணம் குறித்த கேள்விகள் சமீபகாலமாகத் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
ராகுல் பதில்
தீபாவளி கொண்டாட்டத்தின்போது பழைய டெல்லியில் உள்ள கண்டேவாலா இனிப்புக் கடையில் பாரம்பரிய இனிப்புகளைச் செய்துகொண்டிருந்தபோது, கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் விளையாட்டுத்தனமாக

ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்றும், திருமண இனிப்பு ஆர்டர் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.