முதியோர்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க அரசிடம் பணம் இல்லையா? - எம்.பி. ராகுல்காந்தி கேள்வி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
டெல்லியில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்டு மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அரிசி, கோதுமை, தயிர் விலை உயர்வு
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளது. இதனால், 25 கிலோ அரிசி மூட்டை 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
ராகுல்காந்தி கேள்வி
இந்நிலையில், விளம்பரச் செலவுகள் - ரூ. 911 கோடி; புதிய விமானம் - ரூ.8,400 கோடி; முதலாளித்துவ நண்பர்களுக்கு வரி விலக்கு - வருடத்திற்கு ரூ.1,45,000 கோடி ஆனால் முதியோர்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க அரசிடம் ரூ.1500 கோடி இல்லையா என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
