திடீரென ராகுல்காந்தி வெளிநாட்டு பயணம்: காரணம் என்ன?
காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல் காந்தி , வெளிநாடுசென்று இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் செய்ய உள்ளதாக,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும்,ராகுல்காந்தி தனது சொந்த காரணத்திற்காக சென்றுள்ளதாகவும்,இன்னும் சில நாட்களில் நாடு திரும்புவார் என்றும் பதில் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
ஆனால் ராகுல்காந்தி வெளிநாடு செல்வதால்,இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே போல் அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் அதன் பின்னர் இத்தாலியில் உள்ள தனது பாட்டியை பார்க்கவே அவர் சென்றதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இத்தாலி சென்றாரா? அல்லது வேறு நாடு சென்றுள்ளாரா என்பது அவர் வந்த பின்னரே தெரிய வரும்.