கர்நாடக ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனான டிராவிட்டின் மகன் - குவியும் வாழ்த்துக்கள்..!

Rahul Dravid Cricket Team India
By Nandhini Jan 20, 2023 08:36 AM GMT
Report

கர்நாடக ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு டிராவிட்டின் மகன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டனான டிராவிட்டின் மகன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் அவரது மகன்கள் சமித், அன்வே இருவரும் கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில், அவரது இளைய மகன் அன்வே 14 வயதுக்குட்பட்டோருக்கான கர்நாடக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அன்வே பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார்.

கேரளாவில் வரும் 23-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை தென்மண்டல ஜூனியர் கிரிக்கெட் விளையாட்டு நடைபெற உள்ளது. இந்த போட்டியில், அன்வே கர்நாடக அணியை கேப்டனாக வழிநடத்த இருக்கிறார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

rahul-dravid-younger-son-anvay-dravid-capacities