ராகுல் டிராவிட்- ஐ பின்னுக்குத் தள்ளி 2வது இடம் பிடித்த விராட் கோலி - குவியும் பாராட்டு
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளார்.
20 ஓவர் போட்டி
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியது.
இத்தொடர் செப்டம்பர் 20, 23, 25ம் தேதியோடு நிறைவடைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
2வது இடம் பிடித்த விராட் கோலி
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், ராகுல் டிராவிட்-ஐ பின்னுக்குத் தள்ளி, 2ம் இடம் பிடித்தார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் -
சச்சின் - 34357
கோலி - 24078*
டிராவிட் - 24064
இதனையடுத்து, சமூகவலைத்தளங்களில் விராட் கோலிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.