உணவு நேரத்திலும் பதற்றம்; நியூசியை நம்பி இந்திய அணி - ட்ராவிட் தகவல்
இந்திய அணிக்காக நியூசிலாந்து அணி போரடியதை பயிற்சியாளர் டிராவிட் தகவல் கொடுத்துள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நேற்றுடன் முடிந்தது. இந்த தொடரை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலியாவுடனான 4வது டெஸ்டில் வெற்றி கண்டால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை இருந்தது.
ஆனால் சமனில்தான் முடிக்க முடிந்தது. மறுபுறம் 3வது இடத்தில் உள்ள இலங்கை அணி நியூசிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் மோதியது. இதில் இரண்டிலும் வெற்றி கண்டுவிட்டால், அந்த அணி இறுதி சுற்றுக்கு முன்னேறிவிடும். எனவே இலங்கையை நியூசிலாந்து வீழ்த்த வேண்டும் என இந்திய வீரர்கள் பிராத்தணை செய்து வந்தனர்.
பதறிய இந்திய அணி
அதற்கேற்ப சமன் செய்ய வேண்டிய போட்டியை போராடி நியூசிலாந்து அணி கடைசி பந்து வரை அதிரடி காட்டி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இதுகுறித்து இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அனைத்து போட்டிகளிலும் முடிவு கிடைத்துவிட வேண்டும் என நினைத்தோம்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை எங்களின் கைகளில் வைத்துக்கொள்ள நினைத்தோம். அகமதாபாத்தின் பிட்ச்-ஐ பார்த்த உடனே டாஸ் முக்கியம் என்பதை தெரிந்துக்கொண்டோம். அதுவும் முதல் 2 நாட்கள் ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை பார்த்தவுடன், நியூசி உதவியை தான் நம்ப வேண்டியதாயிற்று.
டிராவிட் தகவல்
ஐசிசி தொடர்களில் முக்கிய கட்டங்களில் நியூசி எப்போதுமே இந்தியாவை வெளியேற்றும். இதனால் இலங்கை வென்றுவிட வேண்டும் என பார்த்தோம். ஆனால் எங்களுக்கு நியூசி அணி உதவியது.
நியூசிலாந்து அணி விளையாடும் போது கடைசி நேரத்தில் பரபரப்பாக இருந்தது உணவு நேரத்தில் கூட நாங்கள் அனைவரும் அமர்ந்து பார்த்தோம் நியூசிலாந்துக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும் என கூறியுள்ளார்.