எதுக்கு உங்களுக்கு இவ்வளவு ஓய்வு...? ராகுல் டிராவிட்டை சாடிய ரவி சாஸ்திரி...!
உங்களுக்கு இவ்வளவு ஓய்வுகளுக்கு எதுக்கு? என்று ராகுல் டிராவிட் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் தற்காலிக ஓய்வு
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு, தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி நியூசிலாந்துடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணிக்கு தற்காலிக தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் பொறுப்பேற்றுள்ளார்.
ராகுல் டிராவிட்டை சாடிய ரவி சாஸ்திரி
இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் அடிக்கடி இப்படி ஓய்வு எடுப்பது சரியாக இருக்காது என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், எனக்கு ஓய்வுகளின் மேல் நம்பிக்கை கிடையாது. ஏனென்றால் நான் எனது அணியை புரிந்து கொள்ள விரும்புவேன்.
உண்மையைச் சொல்வதென்றால் உங்களுக்கு இவ்வளவு ஓய்வுகளுக்கு எதுக்கு? ஐ.பி.எல். தொடரின்போது 2 அல்லது 3 மாதங்கள் ஓய்வு கிடைக்கும்.
இது உங்களுக்கு போதும். ஆனால் மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் தனது அணியுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.