நடு ரோட்டில் ஆட்டோ ஓட்டுநரிடம் சண்டை; கொந்தளித்த ராகுல் டிராவிட் - நடந்தது என்ன?

Rahul Dravid Viral Video Bengaluru
By Karthikraja Feb 05, 2025 04:30 PM GMT
Report

 ராகுல் டிராவிட் நடு ரோட்டில் ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ராகுல் டிராவிட், இந்தியா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். 

rahul dravid

டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் ராஜஸ்தான் ராயல் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கார் விபத்து

ராகுல் டிராவிட் தற்போது அவரது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராகுல் டிராவிட் நேற்று (04.02.2025) கன்னிகாம் சாலையில் தனது காரில் வந்து கொண்டிருந்தார். 

rahul dravid fight with auto driver

அப்போது அதே சாலையில் வந்த சரக்கு ஆட்டோ, டிராவிட்டின் கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் காரின் முன் பகுதி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த டிராவிட் காரில் இருந்து இறங்கி வந்து, ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் கூட்டம் கூடியதையடுத்து, ஆட்டோ டிரைவரிடம் செல்போன் எண் மற்றும் வீட்டு முகவரி போன்ற விவரங்களை பெற்று கொண்டு டிராவிட் அங்கிருந்து சென்றுவிட்டார். இது குறித்து அவர் காவல் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்கவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.