பசங்க சொன்னாங்க.. இதான் எங்களோட தோல்விக்கு ஒரே காரணம் : ராகுல் டிராவிட் விளக்கம்

Irumporai
in கிரிக்கெட்Report this article
டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியுடனான அரையிறுதி ப் போட்டியில் இந்திய அணி யின் தோல்வி குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியஅணியும் இங்கிலாந்து அணியும் மோதின , இதில் இந்திய அணி மோசமான தோல்வியினை தழுவியது.
டிராவிட் விளக்கம்
இந்த நிலையில் அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். அதில் இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது .
ஆனால் இன்று எங்களுக்கான நாளாக இல்லை. முக்கிய போட்டிகளில் நிறைய ரன்கள் தான் உதவும். 15 - 20 ரன்கள் குறைவாக அடித்ததே தோல்விக்கு காரணம் என நான் நினைக்கிறேன்.
தவறை திருத்தி கொள்வோம்
ஒருவேளை 180+ ரன்களை அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். இந்திய அணியும் அதிக ரன் அடிக்கதான் முயன்றது. ஆனால் பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்ததால் ரன்களை அடிக்கவே முடியவில்லை என வீரர்கள் கூறினர்.
அதே சமயம் நாங்கள் செய்த தவறுகளை இனி சரிசெய்துக்கொள்வோம். எதிர்காலத்தில் வரும் போட்டிகளில் கவனம் செலுத்தப்போகிறோம் என டிராவிட் கூறினார்.