உலக கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா களமிறங்குவாரா? - ராகுல் டிராவிட் பேட்டி

Nandhini
in கிரிக்கெட்Report this article
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
பும்ரா விலகல்
பிசிசிஐ தன் டுவிட்டர் பக்கத்தில், பும்ராவிற்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளதாக தகவல் தெரிவித்தது. இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
முகமது சிராஜ் சேர்ப்பு
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
டிராவிட் பேட்டி
இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கவுதாத்தியில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து டிராவிட் பேசுகையில்,
மருத்துவ அறிக்கைக்குள் நான் ஆழமாக செல்லவில்லை. பும்ரா காயம் விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அவரது உடல் தகுதி நிலை குறித்த அதிகாரபூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம். தற்போது அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்து அதிகாரபூர்வமாக விலகியுள்ளார்.
உலக கோப்பை போட்டியிலிருந்து விலகவில்லை. அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் நாங்கள் எதுவும் சொல்ல முடியும். நல்லதே நடக்கும் என்று நம்புவோம் என்றார்.