என்னப்பா இது நியாயம்.. டிராவிட் இப்படி செய்யலாமா? - பெருகும் எதிர்ப்பு
இலங்கை தொடரில் சொதப்பிய இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக அந்த தொடரின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியிருப்பதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நிலையில், டி20 தொடரை இழந்தது. இந்திய அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக அனுபவ வீரர் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.இந்நிலையில் சஞ்சு சாம்சன் குறித்து பேசியுள்ள இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், இலங்கை தொடரின் அனைத்து போட்டியிலும் சொதப்பியது சஞ்சு சாம்சனுக்கு நிச்சயம் வேதனையையும், ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை தொடர் பெரும்பாலான இளம் வீரர்களுக்கு அதிருப்தியளிக்கும் விதமாகவே அமைந்தது என்றும், இளம் வீரர்கள் அனைவருமே மிகத்திறமையானவர்கள் என்றும் டிராவிட் கூறியுள்ளார்.