“விராட் கோலி, புஜாராவை மட்டும் குறைக்கூற முடியாது...நீங்களும் ஒழுங்கா ஆடனும்” - ராகுல் டிராவிட் காட்டம்
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று சென்சூரியனில் தொடங்கப்பட்ட நிலையில் இந்திய அணி 2 வீரர்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார.
இதுவரை 7 முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றவில்லை.
எனவே இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று சென்சூரியனில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வலுவான நிலையில் உள்ளது.
இந்திய அணியின் ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் இந்திய அணி முதல் விக்கெட்டிற்கு 117 ரன்களை குவித்தது.
எனினும் மிடில் ஆர்டர் சற்று சருக்கியது. கேப்டன் விராட் கோலி (35), சட்டீஸ்வர் புஜாரா (0), மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோர் தான் இந்தியாவின் மிடில் ஆர்டர் தூணாக உள்ளனர்.
இவர்களில் தற்போது ரஹானே மட்டும் நின்று விளையாடியிருப்பதால் இந்திய அணி தப்பித்துள்ளது.இந்நிலையில் இந்திய அணி 2 வீரர்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை என ராகுல் டிராவிட் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,
“இதுபோன்ற டெஸ்ட் தொடர்களை வெல்ல குழுவாக முயன்றால் மட்டுமே முடியும். தனி வீரரால் முடியாது.
ஒவ்வொரு வீரரும் அவர்களின் செயலை கட்சிதமாக முடித்துக்கொடுத்தாக வேண்டும். விராட் கோலி, புஜாரா மட்டும் செய்யவில்லை எனக்கூறி எப்போதும் குறைக்கூற முடியாது.
இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்.ஒரே ஒரு வீரர் மட்டும் அனைத்து தொடர்களிலும் ரன் குவிக்க வேண்டும் என்றால் முடியாத காரியம்” என கூறியுள்ளார்.