ஹோட்டலை விட்டு வெளியேறிய ராகுல் டிராவிட் - 3வது போட்டிக்கு முன்னால் நடந்த சம்பவம்

 இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்  அணியினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்லாமல் வெளியே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு இந்த மாபெரும் வெற்றி அணியினரையும், ரசிகர்களையும் உற்சாகமடைய செய்துள்ளது. 

மேலும் முதல்முறையாக பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ராகுல் டிராவிட்டுக்கும் இந்த தொடரின் வெற்றி மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துள்ளது. டிராவிட்டின் பயிற்சி வியூகம் இதற்கு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. 

மூன்றாவது டி 20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இதற்காக இந்திய அணியினர் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலுக்கு வந்து ரெஸ்ட் எடுத்தனர். ஆனால் அதிகாலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஹோட்டலுக்கு செல்லாமல் நேராக ஏர்போர்ட்டில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேரடியாக ஈடன் கார்டன் மைதானத்துக்கு சென்றுள்ளார். 

அங்கு சென்று பிட்ச் எப்படி இருக்கிறது என்று பார்த்துள்ளார். காரணம் சமீபத்தில் நடந்த போட்டிகளில் பிட்சும், டாஸும்தான் ஆட்டத்தின் முடிவை மாற்றுகிறது.இதனால்தான் டிராவிட்டும் நேரடியாக மைதானத்தில் விசிட் அடித்துள்ளார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பலரும் வியப்பில் உள்ளனர். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்