பிரதமர் மோடி இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் - ராகுல் காந்தி கைது, மூக்கில் ரத்தக்கசிவு
பிரதமர் மோடி இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி கட்சி (CJP) கடந்த 1 மாத காலமாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.

நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியில் சென்ற போது, காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், கடுமையாக தாக்கி காவல்துறையினரும், துணை ராணுவமும் கூட்டத்தை கலைத்தனர்.
காயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதன் பின்னர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
ராகுல் காந்தி கைது
ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் நீட் முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, போராட்டம் நடத்த வேண்டாம் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், அங்குள்ளவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியது.
जो मौन है, वो गॉन है।
— Lakshya Malik, Advocate (@attorneylakshya) July 21, 2026
लीकेज पर लीकेज हुआ, अब ज़िम्मेदार बताओ कौन है?
जंतर-मंतर गूंज उठा है नारों से आज, और हुकूमत का लाउडस्पीकर ऑफ है!#CJPProtestUpdate #RahulGandhi #AkhileshYadav #CJP #PriyankaGandhi pic.twitter.com/5p0l5zyPRK
கலைந்து செல்ல மறுத்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி, கேரளா முதல்வர் வி.டி.சதீசன், கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் எம்.பிக்கள் கே.சி. வேணுகோபால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் காவல்துறையினரால் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட போது ராகுல் காந்தியின் மூக்கில் ரத்தகசிவு ஏற்பட்டுள்ளது.