10 ஆண்டுகளுக்குப் பின்.. ராகுவின் பெயர்ச்சி - கோடிகளை குவிக்கப்போகும் ராசிகள்!
ராகு பகவான் தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார்.
ராகு பெயர்ச்சி
நவம்பர் 2025 இல் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி தனது சொந்த ராசியான சதய நட்சத்திரத்திற்குள் ராகு நுழைய இருக்கிறார். இது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது.
இதனால் மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அடைய உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிபடையும். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தந்தையுடன் உறவு வலுவடையும். சிலர் மூதாதையர் சொத்துக்களையும் பெற வாய்ப்பு உள்ளது.
கடகம்
தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கணிசமாக உயரும். உங்கள் தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் புதிய வெற்றிகளுக்கான வழிகள் திறக்கப்படும். வாழ்க்கைத் தரம் மேம்படும். குடும்பத்தில் ஆரோக்கியத்துடன், மன அமைதியும், மன மகிழ்ச்சியும் நிலவும். ஒட்டுமொத்தமாக திருப்திகரமாக உணர்வீர்கள்.
கும்பம்
புதிய மூலங்களில் இருந்து பணம் கிடைக்கும். பழைய கடன் பிரச்சனைகள் தீர்க்கப்படும். காதல் தொடர்பான சிக்கல்களும் தீர்ந்து, மகிழ்ச்சி ஏற்படும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சமூகத்தில் உங்களுக்கென அடையாளம் உருவாகும்.