ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்!

RAHMAN DEATH MOTHER STALIN
By Jon Dec 28, 2020 01:26 PM GMT
Report

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் கடந்த சில மாதமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரகுமானை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார்.

இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆறுதல்! ” என்று பதிவிட்டுள்ளார்.