ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் காலமானார்- அதிர்ச்சியில் திரையுலகம்
DEATH
RAHMAN
MOTHER
By Jon
இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் பரிட்சையமானவர்.
ஆஸ்கர் விருதை அள்ளி வந்துதமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். இசை குடும்பத்தை சேர்ந்த ரஹ்மானின் தந்தை இறந்துவிட அவரை சிறுவயது முதலே அரவணைத்து வளர்த்து வந்தவர் அவரின் தாயார் கரீமா.
தனது அம்மா தான் தனக்கு எப்போதுமே சூப்பர் ஸ்டார் எனக் கூறியுள்ள ஏ.ஆர். ரஹ்மான், அவர் மிகவும் துணிச்சலானவர் என்று பல முறை கூறியுள்ளார் ரஹ்மான்.
இந்தநிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.