அய்யோ.. ஹிந்தியா! தெறித்து ஓடிய ஏ.ஆர்.ரஹ்மான்

hindi rahman flim music 99song
By Jon Mar 26, 2021 01:16 PM GMT
Report

சென்னையில் நடைபெற்ற 99 சாங்ஸ் படத்தின் அறிமுக விழாவில், தொகுப்பாளர் இந்தியில் பேசச்சொல்ல ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் இருந்து இறங்கிய சம்பவம் நடந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக கதை எழுதி இசையமைத்துள்ள படம் 99 சாங்ஸ், இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படம் நேரடியாக இந்தியில் உருவாகி இருக்கிறது, அத்துடன் தமிழ், தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கான அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்த போது, தொகுப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இந்தியில் பேசி வரவேற்றார்.

இதைக்கேட்டதும், ''ஐயோ.. இந்தியா..வேண்டவே வேண்டாம்.'' என்று சொல்லிக்கொண்டே, மேடையில் இருந்து ரஹ்மான் சென்றதும், ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.