மீண்டும் மீண்டும் சொதப்பும் ரஹானே - கடுப்பான இந்திய ரசிகர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பியுள்ள ரஹானே மீண்டும் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஷர்துல் தாகூர் 57 ரன்களும், விராட் கோலி 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஓலி போப் 81 ரன்களும், கிரிஸ் வோக்ஸ் 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் குவித்தது.
இதன் பிறகு 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 46 ரன்கள் எடுத்து கொடுத்தார். மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு துவக்க வீரரான ரோஹித் சர்மா 127 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
சீனியர் வீரரான புஜாரா 61 ரன்கள் எடுத்து கொடுத்து தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தார். இதன் மூலம் போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் குவித்திருந்த இந்திய அணி 171 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது. போட்டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் ஜடேஜா (17) விக்கெட்டை இழந்தார்.
துணை கேப்டனான ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். ரஹானே ஏமாற்றம் கொடுத்தாலும், மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி 96 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த போது தேவையில்லாத ஷாட் அடிக்க நினைத்து விக்கெட்டை இழந்தார். இதன் பின் கூட்டணி சேர்ந்த ரிஷப் பண்ட் – ஷர்துல் தாகூர் ஜோடி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்து அசத்திய ஷர்துல் தாகூர், இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்துவிட்டு 72 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் ரிஷப் பண்டும் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வருவதன் மூலம் போட்டியின் 137 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 414 ரன்கள் குவித்து 315 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
Yaar if Ajinkya Rahane could hear the gaaliyaan coming out of my mum’s mouth on the phone right now … selection wouldn’t be an issue, because he’d have quit the game.
— Ahana Arora (@AhanaRandall) September 5, 2021
இந்தநிலையில், இந்த இன்னிங்ஸிலும் டக் அவுட்டான ரஹானே ரசிகர்களின் கடும் விமர்ச்சனத்திற்கு ஆளாகியுள்ளார். ரஹானேவின் பழைய புராணங்களை இன்னமும் பாடி கொண்டே இருக்காமல் அவரை உடனடியாக அணியில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்