ரஹானேவிற்கு இவரால் தான் பிரச்சனை - எச்சரிக்கும் முன்னாள் வீரர்
தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ரஹானேவிற்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.அதே போல் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்தநிலையில், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ஆடும் லெவனில் ரஹானேவிற்கு இடம் கிடைப்பது கஷ்டம் என தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் கே.எல் ராகுக் நியமிக்கப்படுவார் என கருதுகிறேன். அவரால் ரஹானேவிற்கு இனி ஆடும் லெவனில் இடம் கிடைப்பதே கஷ்டம். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய ரஹானேவிற்கு தற்போது துணை கேப்டன் பதவி கூட கிடையாது என்பது வேடிக்கையான விஷயம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.