ஆஸ்திரேலியாவை மிரட்டிய இந்தியா- ரஹானேவுக்கு குவியும் பாராட்டுகள்

cricket rahane test
By Jon Dec 26, 2020 06:13 PM GMT
Report

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரஹானே வகுத்த வியூகங்கள் வியப்பில் ஆழ்த்தின. பாக்சிங் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்த்து மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது.

இந்த இரண்டாவது போட்டியில் கலக்கி வருகிறது இந்திய அணி. கோலி தனது மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதால், இந்தியா திரும்பியுள்ளார்.

அதனால் ரஹானே இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துகிறார். தனது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய ரஹானே. முதல் பத்து ஓவர்களை உமேஷ் யாதவ் மற்றும் பும்ராவை பயன்படுத்தினார்.

ஆட்டத்தின் 11வது ஓவரிலேயே அஷ்வினை பந்து வீச பணித்தார் ரஹானே.

சுழற்சி முறையில் பந்து வீச்சாளர்களை மாற்றிக் கொண்டே இருந்தார்.ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் அசத்தலான ஆட்டத்திற்கு கேப்டன் ரஹானேவின் கேப்டன்சியே காரணம் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.