அரசியலுக்கு வருகிறாரா ராகவா லாரன்ஸ்? ரசிகர்களிடம் நேரடியாக கேட்ட கேள்வி!

Raghava Lawrence Rajinikanth Vijay Tamil nadu Viral Video
By Vinoja Jun 12, 2026 06:33 AM GMT
Report

நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ், தனது அரசியல் என்ட்ரி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே” என்ற வாசகம் தனக்கு மிகவும் பிடித்தமானது எனக் கூறிய அவர், ஒரு குட்டிக்கதை மூலம் தனது கருத்தை விளக்கினார்.வேலை செய்தவருக்கே உண்மையான பலன் கிடைக்கும் என்றும், ஜால்ரா அடிப்பதால் அல்ல என்றும் தெரிவித்தார்.

அரசியலுக்கு வருகிறாரா ராகவா லாரன்ஸ்? ரசிகர்களிடம் நேரடியாக கேட்ட கேள்வி! | Raghava Lawrence Video About Political Entry

தொடர்ந்து, சமூக சேவைகளில் ஈடுபட்டதே தனது அரசியல் பயணத்தின் தொடக்கம் என கூறிய ராகவா லாரன்ஸ், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உதவி செய்த அனுபவத்தையும் பகிர்ந்தார்.

மேலும், அரசியலுக்கு வருவது குறித்து முதலில் தனது தாய் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், “அரசியல் சாக்கடை” என கூறி சம்மதிக்கவில்லை என்ற விடயம் குறித்து வெளிப்படையாக கூறியனார்.

அரசியலுக்கு வருகிறாரா ராகவா லாரன்ஸ்? ரசிகர்களிடம் நேரடியாக கேட்ட கேள்வி! | Raghava Lawrence Video About Political Entry

பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், விஜயின் அரசியல் வருகையும் தனது தாயின் மனநிலையை மாற்றியதாகவும் தனது, தாய் தற்போது தாய் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தெரிவித்தார்.

இறுதியாக, “என் ரசிகர்களை தாய்க்கு நிகராக நினைக்கிறேன். நான் அரசியலுக்கு வரலாமா? அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? என்பதை நீங்கள் கமெண்ட்ஸில் சொல்லுங்கள்” என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.