ராகவா லாரன்ஸூக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இப்படி ஒரு உறவா? - அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன்னை சந்தித்து பேசியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அது தொடர்பாக நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய பட வேலைகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் மாறன் படம் வெளியான நிலையில் , ஐஸ்வர்யா இயக்கத்தில் 'முசாபிர்' எனும் மியூசிக் ஆல்பம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் இயக்குநரும் நடிகருமான லாரன்ஸ் உடன் புகைப்படம் ஒன்றை ஐஸ்வர்யா வெளியிட்டு 'work mode on' என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்.
அதில், என் தங்கச்சியை பார்த்ததுல ரொம்ப சந்தோசம். நாங்க மீட் பண்ண காரணத்தை அவங்களே அதிகாரப்பூர்வமாக சீக்கிரமா அறிவிப்பாங்க. என்னால அதுவரைக்கும் எதுவும் சொல்ல முடியாது. அவங்ககூட வொர்க் பண்ணப் போறதுல ரொம்ப சந்தோஷம்.
அதுவும் இந்த டைம்ல அவங்க வாழ்க்கையில் நடக்குறத பற்றிப் பேச எனக்கு உரிமை இல்லை. ஆனால் என் தங்கச்சி எப்பவும் சந்தோசமா இருக்கணும். நல்லா வரணும். எனக்கு லைப் கொடுத்தவர் தலைவர். அவரோட வீட்டு பொண்ணுங்க எப்பவும் நல்லா இருக்கணும்.என்னை சினிமாவுக்குக் கூப்பிட்டு வந்தது தலைவர்தான். தலைவர் ரசிகராக ஆனதில் இருந்து ரஜினி சாரோட படத்துக்கு டான்ஸ் கொரியோகிராப் பண்ணுன காலத்துல இருந்து தங்கச்சிகள் ரெண்டு பேரையும் நல்லா தெரியும்.
தலைவர் வீட்டுக்குப் போயிட்டு வரும்போதெல்லாம் ரெண்டு தங்கச்சிங்களும் பாசமா பேசுவாங்க. ரஜினி சார் டான்ஸ் ஷூட்டிங் நடக்கும்போது இவங்க ரெண்டு பேரும் ஸ்பாட்டுக்கு வருவாங்க. அப்போ நிறைய நேரம் பேசுவாங்க. ஷங்கர் படத்துல வொர்க் பண்றப்போ அண்ணன்ங்குற உரிமையோட என்கிட்ட நல்லா பேசுவாங்க. ரொம்ப மரியாதையான பொண்ணு ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு அண்ணனா என் தங்கச்சி வாழ்க்கையில எப்பவும் இருப்பேன் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இதனைக் கண்ட சினிமா ரசிகர்கள் இப்படி ஒரு அண்ணன் - தங்கச்சியா என நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
You May Like This