திருச்சி கிழக்கில் போட்டியிடவில்லை – ராகவா லாரன்ஸ் விளக்கம்
கடந்த சில நாட்களாக நடிகர் ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்ற தகவல் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தான் அந்தத் தொகுதியில் போட்டியிடவில்லை என்று ராகவா லாரன்ஸ் காணொளி மூலம் விளக்கம் அளித்துள்ளார்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல்வர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியிலிருந்து ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ராகவா லாரன்ஸ் விளக்கம்
இதையடுத்து, அந்தத் தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து முன்பு அவர், “நான் அரசியலுக்கு வரலாமா?” என்று ரசிகர்களிடம் கருத்து கேட்ட வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும், முதல்வர் விஜய்யின் புதிய ஆட்சி குறித்து பேசியபோது அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதற்கு விளக்கம் அளித்த வீடியோவும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடவில்லை என்றும், தனது முந்தைய கருத்துகள் குறித்தும் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan