செம்ம க்யூட்டா.. தன் தாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகராவார். தன்னுடைய நடனத் திறமையால் சினிமாத்துறையில் முன்னுக்கு வந்தவர்.
சமீபத்தில், ஐஸ்வர்யாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ், ஐஸ்வர்யாவின் ‘பயணி’ பாடல் ஆல்பத்திற்காக வாழ்த்து தெரிவித்தார்.
தற்போது, ஐஸ்வர்யா, ராகவா லாரன்ஸை வைத்து படம் எடுக்க உள்ளதாக வெளியான தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் தன் தாயுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு, ‘என் வாழ்வின் ராஜா என் அம்மா’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் -
My mother is the king of my life ? pic.twitter.com/9dYh1JHqih
— Raghava Lawrence (@offl_Lawrence) March 31, 2022